Pages - Menu

Sunday, September 8, 2013

அன்ன யாகம் (அன்ன ஹோமம்) என்கிற சிறப்பு அன்னயக்ஞம் நடைபெற்றது..

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் 8.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பீடத்தில் அமைந்திருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும், குருமார்களுக்கும், ரிஷிகளுக்கும், லிங்க வடிவில் அமைந்திருக்கும் 468 சித்தர்களுக்கும் அன்னம், புளியோதரை, பாயாசம், சாம்பார், ரசம், கூட்டு என பல வகைகளில் நெய்வேத்தியமாக எடுத்துச்செல்லப்பட்டு யாக குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அன்னயக்ஞனமானது சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் பீடத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின் அருளையும், இதர 65 பரிவார தெய்வங்களின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று சென்றனர்.

இந்த அன்ன யாகத்தின் சிறப்பு காட்சியை இங்கே பார்க்கலாம்.












No comments:

Post a Comment