Pages - Menu

Monday, September 9, 2013

தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதூர்த்தி சிறப்பாக நடைபெற்றது...

தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு
23 விதமான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்த காட்சி.








ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்களின் வாழ்வில் அறம் வளரவும், இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்  சேரவும், விரும்பியவை அனைத்தும் கிடைக்கவும், அனைத்து சௌபாக்கியங்களுடன் கல்வியில் மேன்மையை அடையவும், பெருந்தன்மை ஏற்படவும், பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கவும், முகப் பொலிவும், அழகும் கூடவும், வீரமும், தைரியமும் ஏற்படவும், எல்லா முயற்சியிலும் வெற்றி கிட்டவும், கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கவும், மகப்பேறு கிடைக்கவும், நுண்னறிவு பெற்றிடவும், பெரும் புகழும், நற்பெயரும் ஏற்படவும், எதையும் தாங்கும் மனோ தைரியம் உண்டாகவும், இல்லறம் நல்லறமாக அமையவும், உயர்பதவியும், பதவியால் கீர்த்தி கிடைக்கவும், சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும், கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கவும், நல்ல கணவன் மனைவி அமையப்பெறவும், துயரங்கள் தீரவும், குடும்பம் ஷேமம் இருக்கவும் என பல்வே வேறு பிரார்த்தனைகளுடன் கீழ்கண்ட 23 வகையான இலைகளை               கொண்டு தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு உலக நலன் கருதி கலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி, கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை போன்ற இலைகளாகும்.

இதனைத்தொடர்ந்து நித்திய அன்னதானத்தில் விநாயக சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதில் மதவேறு பாடின்றி அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment