Pages - Menu

Wednesday, August 28, 2013

விரைவில் விநாயகர் சதூர்த்தி திருவிழா...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் 
சதூர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் 23 இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை 

செப்டம்பர் 9, 2013 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லாலான ஸ்ரீ விநாயக தன்வந்திரி, தன்வந்திரி விநாயகர் என்ற முறையில் நான்கடி உயரத்தில் சிம்ம பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடு செய்து, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதையும் காணலாம்.

'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன என்பதை நாம் காணலாம்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயக சதுர்த்தியன்று 23 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்துடன் அர்ச்சிக்கப்பட உள்ளது. அவ்வாறான இலைகளும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

எண் இலைகள் பலன்கள்
1. முல்லை இலை   அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை
இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்
 சேரும்.
3. வில்வம் இலை விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை
பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி பலன் முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி
வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை நுண்னறிவு கிடைக்கும்
14. மாதுளை இலை பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை
எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை
இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை
உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை
சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம 
கிடைக்கப்பெறும்.
19. தாழம் இலை
செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை
கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் இலை
நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
22. தும்பை இலை துயரங்கள் தீரும்.
23. குண்டுமணி இலை குடும்பம் ஷேமம் ஏற்படும்.

No comments:

Post a Comment