Pages - Menu

Monday, August 5, 2013

கருட பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ கருட ஹோமம்..

தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி பகவானுக்கு வாகனமாக கஷ்டம் தீர்க்கும் அஷ்டநாகக் கருடனாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கருட பகவானுக்கு வருகிற 11.8.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு ஹோமமாக ஸ்ரீ கருட ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமம் வாகன விபத்துக்கள் நிகழாமல் இருக்கவும், பட்சிதோஷங்கள் அகலவும், நாக தோஷங்கள் நீங்கவும், வாகன யோகம் ஏற்படவும், பட்சிராஜாவாக போற்றப்படுகின்ற கருட பகவானுக்கு உகந்த தினமான ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று நடைபெறுகிறது.

கருட பஞ்சமியின் சிறப்பு..
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே என்று புராணங்கள் கூறுகின்றன.


இத்தகைய சிறப்பு நாளில் ஸ்ரீ கருட ஹோமத்திலும், கருட பகவானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்திலும் கலந்து கொண்டு, தன்வந்திரி அருளுடன், பெரிய மற்றும் சிறிய திருவடிகளின் அருள்பெற பிரார்த்திக்கின்றோம்.

No comments:

Post a Comment