Pages - Menu

Thursday, January 31, 2019

Ekadasi Maha Danvantri Homam

தன்வந்திரி பீடத்தில்

ஏகாதசி ஹோமமும்சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனமும்நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், உலக மக்கள் நலன் கருதி தை ஏகாதசியை முன்னிட்டு இன்று 31.01.2019 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்த மஹா தன்வந்திரி ஹோமத்திலும் சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்பவர்கள் உலக மக்களுக்கு நல்லதூக்கம் கிடைக்கவும், துன்பங்கள் துயரங்கள் நீங்கவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கவும், சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர். R. பிரதாப் குமார் அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment