Pages - Menu

Wednesday, November 14, 2018

Pavithrotsavam - Koti Japa Kubera Lakshmi Yagam ....

தன்வந்திரி பீடத்தில்

பவித்ரோத்ஸவம் நிறைவும் 

கோடி ஜப குபேர யக்ஞம் தொடக்கமும்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி சென்ற 12.11.2018 முதல் 14.11. 2018 இன்று வரை உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்திக்காகவும் பவித்ரோத்ஸவம் நடைபெற்றது. இதில் 10 க்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர்கள் பங்கேற்று தினமும் கோ பூஜை, வேத பாராயணம், யாகசாலை பூஜை, கலச பூஜை, பவித்ர ஹோமங்கள் நடைபெற்று, தெய்வ சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு திருமஞ்சனம், பல்வேறு விதமான ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மதியம் மஹா பூர்ணாஹூதி நடைபெற்று கலச தீர்த்தங்கள் ப்ரோக்ஷித்து பவித்ர மாலைகள் கலையப்பட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது. இதில் வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் உருமையாளர் திரி. சுரேஷ், சென்னை டெக்ஸ்டைல் உருமையாளர்கள், செய்யாறு தாசில்தார் திருமதி. ரேணுகா கிருஷ்ணமூர்த்தி, சிங்கப்பூர் வேதவியாச குடும்பத்தினர்கள், கோயம்பத்தூர் ஆடிட்டர் திரு. ராஜகோபாலன், ஊட்டி ராஜசேகர் மற்றும் பலவேறு தரப்பு மக்கள் பங்கேற்றனர். பவித்ரோத்ஸவத்திற்கான பவித்ர மாலைகளை புதுச்சேரி, பஞ்சவடி க்ஷேத்திரத்தின் தலைவர் திரு. கோதண்டராமன் அவர்கள் ஆலயம் சார்பாக உபயம் செய்து பவித்ரோத்ஸவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் பங்கேற்ற ஆச்சாரியர்களுக்கும் பவித்ர மாலைகள் வழங்கி தீர்த்தபிரசாதமும், அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. 

பவித்ரோத்ஸவ பலன் :

ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்படவேண்டிய நித்திய நைமித்திக காம்ய, கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் அகலும்.  நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று 14.11.2018 முதல் 25.11.2018 வரை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் வேண்டியும், ஆரோக்யம் வேண்டியும், சகல காரிய ஜயம் வேண்டியும் நடைபெற உள்ள கோடி ஜப லக்ஷ்மி குபேரர் யக்ஞத்தின் பூர்வாங்க பூஜைகள் காலை 10.00 மணிக்கு துவங்கியது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









No comments:

Post a Comment