Pages - Menu

Friday, October 19, 2018

Navaratri Pooja - Sulini Duraga Homam - Shirdi Sai Baba's 100th Aradhanai ......


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன்

சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு

சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






















No comments:

Post a Comment