Pages - Menu

Wednesday, September 26, 2018

Sudarsana Homam....


தன்வந்திரி பீடத்தில்சோதனைகள் விலக சுதர்சன ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ரோஹிணி நக்ஷத்திரம், ஷஷ்டி திதியை முன்னிட்டு வருகிற 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி பாதைகள், சத்ரு பாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ ஸுதர்ஸனாய வித்மஹே
 மஹா ஜ்வாலாய தீ மஹி
தந்நோ ஸ்சக்ர: ப்ரசோதயாத்

ஹோமங்களின் மஹிமை :

ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகவும், நம்பிக்கையுடனும் செய்கிறோம் என்பதை வைத்து தான் பகவான் அனுக்கிரஹம் செய்வார். ஸ்ரீ பகவத் கீதையில், ‘நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன்என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். பொதுவாக ஹோமங்கள் நடைபெறும் பொழுது ஹோமம் செய்பவரின் சிந்தனையும் மனமும் ஹோமத்திலேயே லயித்திருக்க வேண்டும். வேறெந்த வகையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் பகவானை மனதில் நினைத்து ஹோமம் செய்த மாத்திரத்திலேயே பகவான் யாகங்களில் ஜோதி ஸ்வரூபமாக திருக்காட்சி அருள்வதை நாம் காணலாம்.

சுதர்சன மஹா ஹோமத்தில் சேர்க்கப்படும் திரவியங்கள் :

ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி நடைபெறும் இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட உள்ளது. மேலும் யாகத்தில் வைத்த வெண்ணையை  பூஜித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

சுதர்சன யாகத்தின் பலன்கள் :

மேற்கண்ட சுதர்சன யாகம் தொழில், வியாபாரம், உத்யோகத்தில்  உயர்வு, சத்ருபாதை  விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள்னிவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடத்தில் சக்கிரத்தாழ்வார் :

4 அடி உயரத்தில் ஷட்க்கோண வடிவில், தீ ஜ்வாலைகளுடன் 16 திருக்கரங்களுடன், சிரித்த முகத்துடன், அழைத்த உடன் ஓடோடி வந்து அனுக்கிரகம் செய்யும் விதமாக தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சமான  ஸ்ரீ சுதர்சன சக்ரராஜ பெருமானை வழிபட்டு நாளும் நன்மை பெற அன்புடன் அழைக்கின்றோம். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகிறது.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment