Pages - Menu

Friday, August 10, 2018

Santhi Durga Homam....


தன்வந்திரி பீடத்தில் சகல சௌபாக்யம் தரும்

சாந்தி துர்கா ஹோமம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 10.08.2018 ஆடி வெள்ளியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சகல சௌபாக்யம் தரும் சாந்தி துர்கா ஹோமம் நடைபெற்றது.

சாந்தி துர்கா ஹோமத்தின் பலன் :

பாவங்களை நீக்கி, பயத்தையும், எதிரிகளையும் அழித்து நம்மை காப்பவள் துர்காதேவி. இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். இவளை வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்யமும் மன அமைதியும் கிடைக்கும்.

துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா, சாந்தி துர்கா, என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா என்ற பெயரில் வணங்குகின்றனர்.
இந்த யாகத்தில் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மூலிகைகள், மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment