Pages - Menu

Friday, August 3, 2018

Aadi Koozhvarthal, Suktha Homam, Bhavani Homam....


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஆடி விழா.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குந்தைகள் கல்வியில் மேன்மை அடையவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 03.08.2018 மூன்றாவது வெள்ளிக் கிழமை, ஆடி பெருக்கு முன்னிட்டு குடும்ப க்ஷேமத்திற்காக காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைகளுக்கும் 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், நவ கன்னிகைகளுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் ஆடி பெருக்கு முன்னிட்டு சூக்த ஹோமங்களும் தன்வந்திரி பீடத்தில் வைபவமாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்ச்சியில் மகிஷாசுரமர்த்தினிக்கு 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், மஹா அபிஷேகமும், நவகன்னிகை மற்றும் முனீஸ்வரனுக்கு பொங்கல் இடும் வைபவமும் ஆடி பெருக்கை முன்னிட்டு பாபம் போக்குன் பவானி ஹோமமும், சூக்த ஹோமங்களும் நடைபெற்றது. மேலும் ஆடி பெருக்கு முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார், மரகதாம்பிகை, அன்னபூரணிதேவி, குபேர லக்ஷ்மி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.













.


No comments:

Post a Comment