Pages - Menu

Thursday, August 9, 2018

72nd Independence Day..........


தன்வந்திரி பீடத்தில்15.08.2018, புதன்கிழமை

72 வது சுதந்திர தினவிழா - பாரதமாதா ஹோமம்.


தன்வந்திரி பீடத்தில் 72 வது சுதந்திர தினவிழா முன்னிட்டு 15.8.2018 காலை 10.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றமும், பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில்  நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து  அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், பாரதமாதாவுடன் 75 பரிவார தெய்வங்களையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் பிரதிஷ்டை செய்து தினசரி யாகங்கள் செய்து வருகிறார்.

அரும்பாடுபட்டு நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது  ஒவ்வொருவருடைய கடமையாகும். அந்த வகையில்  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும்,  இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழைவு பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் பூமித்தாய் என்கிற அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து தேச நலமே தேக நலம், தேக நலமே தேச நலம் என்ற தாரக மந்திரத்துடன் தினசரி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 15.8.2018 புதன்கிழமை 72 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் பீடத்தின் 13 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றம் மற்றும் பாரத மாதாவிற்கு ஹோமம், அபிஷேகம் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் அனைத்து பொதுமக்களும் வந்திருந்து பங்கேற்று சுதந்திரதேவியின் அருளை பெறவேணுமாய் தன்வந்திரி குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment