Pages - Menu

Monday, July 30, 2018

Aadi Kuzhvarthal - Suktha Homams..


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குடும்ப க்ஷேம ஹோமத்துடன் 13 வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குந்தைகள் கல்வியில் மேன்மை அடையவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி மாதம் 18ம் தேதி 03.08.2018 மூன்றாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு குடும்ப க்ஷேமத்திற்காக காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைகளுக்கும் 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், ஆடி பெருக்கு முன்னிட்டு சூக்த ஹோமங்களும், நவ கன்னிகைகளுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் தன்வந்திரி குடும்பத்தினர்களால் நடைபெற உள்ளது.

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன் ???

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ஜுரின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம்  தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க  அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை  உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த  உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்  வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மனின் அருளை பெற்று நவகன்னியரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் ஆடி பெருக்கு முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார், மரகதாம்பிகை, அன்னபூரணிதேவி, குபேர லக்ஷ்மி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

.


No comments:

Post a Comment