Pages - Menu

Friday, June 22, 2018

Sri Sudarsana Jayanti 2018


தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ சுதர்சனர் ஜெயந்தி சிறப்பு பூஜைகள்
நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 22.06.2018 வெள்ளிக்கிழமை ஆனி மாதம் சித்திரை நக்ஷத்திரம் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு  சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.

இந்த பூஜையில் தீர்க்க ஆயுசு பெறவும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும், அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் பிரார்த்தனை செய்யபட்டது.

மேலும் சுதர்சன பெருமாளுக்க விசேஷ திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவிதனர்.





No comments:

Post a Comment