Pages - Menu

Sunday, June 24, 2018

Indrastra Homam....


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
இந்திராஸ்திர ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 24.06.2018 ஞாயிற்றுக் கிழமை, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை வளர்பிறை துவாதசி திதியில் தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெஇந்திராஸ்திர ஹோமம், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ வாஸ்து பகவானுடன் அஷ்டதிக் பாலகர்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் தனி சன்னதி உள்ளது. இதில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ இந்திர தேவனை வழிபடும் விதத்தில் மேற்கண்ட யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்தில் தகுதி அடிப்படையில் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் அரசுப் பணியாளர்கள் உயர்பதவி பெறவும், தடை செய்து வைத்திருக்கும் பதவி உயர்வை திரும்பப் பெறவும், பணி இடமாற்றத்தால் ஏற்படும் மனச்சங்கடங்கள் நீங்கவும், குடும்பத் தலைவனின் புகழ், அந்தஸ்து உயர்வடைந்து குடும்பம் மேன்மை அடையும், குடும்பத்தில் மதிப்பு உயரவும், பணிகளில் உள்ளவர்களுக்கும் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படும் எதிர்ப்புகள் விலகவும், சொத்து சுகங்களை இழந்து தவிப்பவர்களுக்கு வாழ வழி பிறக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

மேலும் ஸ்ரீ இந்திர தேவனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment