Pages - Menu

Sunday, June 10, 2018

Ekadasi Amla Powder Abhishekam....


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு இன்று 10.06.2018 ஞாயிற்றுக் கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நெஞ்சுவலி வராமல் தடுத்து இதயத்தை காக்கவும், மூட்டுவலிகள் குறையவும், கண்களை பாதுகாக்கவும், மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின்சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெளிளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் பங்கேற்க பக்தர்களுக்கு ஔஷதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment