Pages - Menu

Friday, January 5, 2018

சங்கடஹர கணபதி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு
சங்கடஹர கணபதி ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 05.01.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி அளவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடங்கள் தீர சங்கடஹர கணபதி ஹோமமும் அஷ்ட திரவிய அபிஷேகமும் நடைபெற்றது.

இந்த யாகத்தில் கரும்புஅருகம்புல், நெல்பொரி, அவல், வறுகடலை, கொப்பரை, வெல்லம், எள், நெய், வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட்டது.

பங்கேற்றவர்கள் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரவும், வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய வேண்டியும், மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய வேண்டியும், சனியின் தாக்கம்  குறையவும் பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment