Pages - Menu

Saturday, January 13, 2018

ஸ்ரீ வாசவி ஹோமம்.....

தன்வந்திரி பீடத்தில்வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி ஹோமம்


என்னுடன் அக்னி பிரவேசம் செய்த 102 கோத்திரக்காரர்களுக்கும் நான் உங்கள் குல தெய்வமாக இருந்து உங்கள் சந்ததியினரையும், என்னை வழிபடும் பிற மத, இனத்தவரையும் காத்தருள்வேன்என்றும்  பொன், பொருள், கல்வி, புகழ் உள்ளிட்ட சகல சம்பத்துக்களையும் பெற்று  குறைவின்றி வாழ்வீர்கள் என்று ஆரிய வைசியர் குலத்தவர்களுக்கு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிதேவி அசிர்வதித்த தை அமாவாசைக்கு.  இரண்டாவது நாள்தான் ஆந்திர மாநிலம் பெனுகொண்டா நகரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நகரேஸ்வர சுவாமி சன்னதி முன்பாக ஸ்ரீ வாசவி அக்னி பிரவேசம் செய்த நாளாகும்.  

ஆரிய வைசியர் குலத்தவர் தாங்கள் செய்த புண்ணியம் மற்றும் வழிபாட்டு பலன்கள் காரணமாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிதேவி குலதெய்வமாக பெற்றனர். பார்வதிதேவியின் ஒரு அங்கமே ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரிதேவி ஆவார். இவரின் சுயசரிதத்தைப் படிப்பவர்க்களும், காதார கேட்பவர்க்களும் இப்புவியில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்என்கிறது கந்தபுராணம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய ஆரிய வைசிய பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ வாசவாம்பாள் எனும் ஸ்ரீ வாசவி தேவியை நாலடி உயரத்தில் இரண்டு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில்  அருள்பாலிக்கிறாள். கையில் கிளியுடன் அன்னை மீனாக்ஷி போன்ற அழகுடன் பிரதிஷ்டை செய்து அவரின் அவதார திருநாளான வைகாசி மாத வளர்பிறை தசமியிலும், தை அமாவாசைக்கு இரண்டாவது நாளில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அக்னிப் பிரவேசம் செய்த நாளிலும் மற்றும் விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜை செய்து வருகிறார். இப்பீடத்திற்கு முன்னாள் தமிழக கவர்னர் மேதகு.Dr.K.ரோசய்யா அவர்கள் வருகை புரிந்து மஹாமண்டப பூமி பூஜையில் பங்கேற்று ஸ்ரீ வாசவி தேவியை  தரிசித்து ஸ்வாமிகளை பாராட்டி சென்றுள்ளார்.

வருகிற 18.01.2018 வியாழன் ஸ்ரீ வாசவி தேவி அக்னிப் பிரவேசம் செய்த நாள் என்பதால் அன்று அதிகாலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00 மணிக்கு மூலவர் ஸ்ரீ வாசவி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களை கொண்டு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 09.00 மணிக்கு கணபதி ஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், புஷ்பாஞ்சலி மற்றும் பயத்தம் பருப்பு சுண்டல் நிவேதனத்துடன் வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment