Pages - Menu

Wednesday, January 31, 2018

பௌர்ணமி - தைப்பூசம் பல்வேறு விதமான யாகங்களும் பூஜைகளும்...

தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமி - தைப்பூசம்
பல்வேறு விதமான யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குறித்த வயதில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் இன்று புதன் கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு விதமான யாகங்கள், நிவாரண பூஜைகள் காலை 10.00 மணி முதல் நடைபெற்றது.

பௌர்ணமியை முன்னிட்டு பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், குழந்தை பாக்யம் வேண்டி சந்தானகோபால யாகம், நவனீத கிருஷ்ணருக்கு வெண்ணை சாற்றும் வைபவம், 27 நட்சத்திர பரிகார ஹோமம், 468 சித்தர்களுக்கு சிறப்புபூஜை, ராகு – கேது அன்னாபிஷேகமும் நடைபெற்றது.


தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலாருக்கு அபிஷேகம், ஹோமம், கஞ்சி கொடுக்கும் வைபவம், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம், நவகன்னிகைகளுக்கு குழந்தைவரம் வேண்டி தொட்டில் கெட்டும் நிகழ்ச்சி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகமும், கிரகண சாந்தியும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் – பெண்கள், தம்பதிகள், தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்னாடகா, புதுச்சேரி மாநில பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமிகளிடம் அருளாசி பெற்று பயன் பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
















No comments:

Post a Comment