Pages - Menu

Saturday, November 18, 2017

கந்தர்வராஜ யாகம்

நாளை
தன்வந்திரி பீடத்தில்
கந்தர்வராஜ யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நாளை 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வராஜ யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

நாளை 19.11.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம்  நடைபெற உள்ளது. பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு;
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172230033, செல்9443330203

No comments:

Post a Comment