Pages - Menu

Thursday, October 12, 2017

64 பைரவருடன் அஷ்ட பைரவர் யாகம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
64 பைரவருடன் அஷ்ட பைரவர் யாகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்   இன்று தேய்பிறை அஷடமியை முன்னிட்டு, 64 பைரவருடன் அஷ்ட பைரவர் யாகம்  மதியம் 12.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெற்றது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பத்துக்கு மேற்பட்ட வேத விற்பனர்கள் பங்கேற்று 74 கலசங்கள் வைத்து பூர்வாங்க பூஜையுடன் கோ பூஜை, யாகசாலா பூஜை, 74 கலச பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் 64 பைரவர் பலி பூஜை, அஷ்ட பைரவர் யாகம், சொர்ண பைரவர் யாகத்துடன்  மாபெரும் அஷ்டமி யாகம், மஹா ப்ரத்யங்கிரா யாகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பால், தயிர் போன்ற பதினாறு விதமான திரவியங்களை கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள சொர்ண பைரவருக்கும், அஷ்ட பைரவருக்கும், மஹா கால பைரவருக்கும் மஹா அபிஷேகமும் ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. பிறகு சிகப்பு அரளி பூக்களை கொண்டு ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கும், பைரவருக்கும் உலக நலம் வேண்டி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் ஸ்வாமிகளிடம் அருட்பிரசாதங்கள் பெற்று சென்றனர். இதில் வேலூர் தொலை தொடர்பு துறை பொது மேலாளர் திரு. கே. வெங்கிட்ட ராமன், சென்னை தொழிலதிபர் திருமதி. கமலாகணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.  










No comments:

Post a Comment