தன்வந்திரி பீடத்தில்
அஷ்டமி யாகம்
நடைபெற்றது
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 13.09.2017
புதன் கிழமை தேய்பிறை
அஷ்டமி யாகம் நடைபெற்றது.
இந்த யாகம் வரவேண்டிய பணம் வரவும் தரவேண்டிய பணம் தரவும். நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும் சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரிக்கவும் அரசியலில் வெற்றிகள் உண்டாகவும், கடுமையான கர்மவினைகள் தீரவும் தம்பதிகள் ஒற்றுமையுடன்
இருக்கவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும்
வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும்,வெளி
நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும் வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள்
அகலவும் இன்றூ காலபைரவர் ஹோமம் , சொர்ண பைரவர் ஹோமம் மற்றும் ம்ருத்ஞ்ய ஹோமம்
நடைபெற்றது. பைரவர்களுக்கும் மகிஷாசுரமர்த்தினிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்று.தொடர்ந்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று
பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:
Post a Comment