Pages - Menu

Friday, August 4, 2017

Vara Mahalakshmi Yagam and Aadi Koozh Vaarthal....

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி யாகம்

கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குழந்தைகள் கல்வியில் மேன்மை அடயவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மக்கள் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று ஆடி மாதம் 19ம் தேதி 04.08.2017 வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி நோன்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கோ பூஜை கணபதி பூஜையுடன் வரம் அருளும் வர மஹாலக்ஷ்மி யாகமும் நவ கன்னிகைக்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.















No comments:

Post a Comment