Pages - Menu

Friday, August 18, 2017

Purattasi Sani 2017 - Pushpa Yagam/Danvantri Homam/108 Herbal Thirumanjanam

பொன்னான வாழ்வு தரும் புரட்டாசி 

சனிக்கிழமையில் வாலாஜாபேட்டை

தன்வந்திரி பீடத்தில்

செப்டம்பர் 23ல் தன்வந்திரி பெருமாளுக்கு

தன்வந்திரி ஹோமம் - 108 திரவிய திருமஞ்சனம் புஷ்ப யாகம்


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் 

மற்றும் பீடாதிபதிகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 

ஆக்ஞைபடி உலக நலன் கருதி வருகிற 23.09.2017 புரட்டாசி மாதம் 7-ஆம் 

தேதி முதல் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு மக்களின் உடல் பிணி

உள்ளத்து பிணி நீங்க மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு விசேஷ 

மூலிகைகளை கொண்டு சிறப்பு ஹோமமும், 108 திரவிய திருமஞ்சனமும்

பலவித மலர்களால் புஷ்ப யாகமும் நடைபெறவுள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை விரத மஹிமை :

பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள்

அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் 

அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் 

அழைப்பார்கள். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் 

நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும்

பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்

இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு 

வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் 

முழுவதும் விரதம்  கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் 

வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு.

பல  தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல  தடைகளை நீக்கி நலன்களை 

வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை

பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க  போதிய ஆயுளும்

ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய 

முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம்..பாவ வினைகளால் உண்டான 

பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் 

தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய 

பலம், சௌபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக 

அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர்.

உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் 

உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் 

புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும்

மகத்துவம் மிகுந்ததும் ஆகும் குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை

நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் மிகவும் சிறந்தது.

தன்வந்திரி பீடத்தில் புரட்டாசி சனிக்கிழமை :

இந்த 2017-ஆம் ஆண்டு  செப்டம்பர் 23,30 மற்றும்  அக்டோபர் 

7,14 ஆகிய நாட்களில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும்

ஆரோக்ய லக்ஷ்மி தாயாறுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. மேலும் 

இப்பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 9-அடி உயரமுள்ள சஞ்சிவி 

ஆஞ்சநேயருக்கும், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ சத்யநாராயணர், ஸ்ரீ 

லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ சுதர்சன 

ஆழ்வார், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர், ஸ்ரீ செந்தூர ஆஞ்சனேயர், ஸ்ரீ 

கல்யாண ஸ்ரீனிவாசர் போன்ற சன்னதிகளிலும் புரட்டாசி மாததை முன்னிட்டு 

சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்பு :

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம்

இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது

புரட்டாசி  சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் 

காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான 

திருமாலை வணங்குவது  வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல 

நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியை போல் 

கொடுப்பாருமில்லை. கெடுப்பாரும்  இல்லை என்று சொல்வார்கள்

நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை 

பொருத்தே ஆயுள்காலம் அமையும்.

சனீஸ்வரனும் புரட்டாசி சனிக்கிழமையும்:

சனீஸ்வரனுக்குரிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம்

எனவே கரியப்பட்டினை  அவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் 

செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய 

வேண்டியவை.உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளு பதார்த்தங்கள் 

சேர்த்தல் நன்று. இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை 

முதலியவற்றை தானம்  செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு 

பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு 

தானம் செய்தல் வேண்டும். ஏனைய விரதங்களுக்கு எண்ணெய் முழுக்கு 

விலக்கப்பட்ட ஒன்று. ஆனால், சனீஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்த்து 

நீராடல் வேண்டும் இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பீடத்தில் 

பொன்னான வாழ்வு பெற 23.09.2017 புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று நடைபெறும் புஷ்ப யாகத்திலும் நோய் தீர்க்கும் ஹோமத்திலும் 108 திரவிய 

அபிஷேகத்திலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு அருளுடன் திரு 

அருள்பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விபரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுராவாலாஜாபேட்டை - 632513.
வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274 | Cell : 9443330203


No comments:

Post a Comment