Pages - Menu

Friday, August 5, 2016

தன்வந்திரி பீடத்தில் இன்று ஆடிவெள்ளியை முன்னிட்டு நவகன்னி பூஜையுடன் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.


வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடிஇன்று காலை ஆடி மாதம்  3 வது வெள்ளிக்கிழமை 11ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழா நண்பகல் 12.00 மணியளவில், நவகன்னிமார்களுக்கும் முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உலக மக்களின் அம்மை நோய் நீங்கவும். ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதை தவிர்க்கவும் சௌபாக்கியங்கள் ஏற்படவும் மரணபயம் அகல இன்று ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தலைமையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நவகன்னிகை மற்றும் இதை முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதனை தொடர்ந்து ஸ்ரீ அன்னபூரணிக்கு அன்னபடையல் வைபவம் நடைபெற்றது.

இதில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சென்றனர்.

 









 



 





 






No comments:

Post a Comment