Pages - Menu

Monday, August 15, 2016

70th Independence Day Celebrations 2016 in Sri Danvantri Peedam

தன்வந்திரி பீடத்தில் 70 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்  நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில் 70 வது சுதந்திர தினவிழா இன்று 15.8.2016 காலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 11 ஆம் ஆண்டாக சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது.

அரும்பாடுபட்டு நம் முன்னோர்கள் நமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமையாகும்.என்று ஸ்வாமிகள் தெரிவித்தார் .பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னை ஸ்ரீ பாரத மாதா சிலைக்கு சிறப்பு ஹோமத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளை பெறவும் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலனும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுதந்திர தினத் திருவிழா நடைபெற்றது. 
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.














No comments:

Post a Comment