Pages - Menu

Tuesday, June 7, 2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலச்சக்கரம்.27 நட்சத்திரங்களை 12 ராசிக்குள்ளும் 12 ராசிகளை 9 நவகிரகங்களுக்கு விருட்ச பூஜைஇ செவ்வாய் கிழமையை முன்னிட்டு ராகு கால பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது.



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் மழைவேண்டியும் நட்சத்திர தோஷம் அகலவும் நவகிரக தோஷம் நீங்கவும் ராசி அதிபதிகளின் அருள் பெறவும் பிறந்த ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் குறையவும் தன்வந்திரி பீடத்தில் விஷேசமாக அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர மற்றும் நவகிரக விருட்சங்களுக்கு இன்று மாலை ராகு கால பூஜை நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட வேஷ்டி புடவை ஜாக்கெட் பிட் மற்றும் சௌபாக்கிய பொருட்கள் வழங்கப்பட்டது..
காலச் சக்கரம் அமைப்பு
உலகமானது சுழன்று பகல் இரவு பொழுதுகள் மாறி மாறி வருகின்றன.இது தான் காலச் சக்கரத்தின் சுழற்சி உலகில் உள்ள மக்கள் இந்த சுழற்ச்சிக்கு ஆட்பட்டு நன்மைதீமை உயர்வுதாழ்வு என்று பற் பலபலன்களைஅனுபவிக்கின்றனர்,
உலகவாசிகள் ஓவ்வொருவருக்கும் அவரவர்களின் ஜாதகத்தின் படி கிரகஅம்சங்களின் படி நன்மை தீமைகள் ஏற்படுகின்றன.பல கோடி மக்களின் பிறப்பும் 27 நட்சத்திரங்களின் வகைப்பத்தி 27 நட்சத்திரங்களை 12 ராசிக்குள்ளும் 12 ராசிகளை 9 நவகிரகங்களுக்கும் ஆட்படுத்தி நவகிரகங்களின் சஞ்சாரத்திற்க்கு ஏற்ப பலன்கள் கணிக்கப்படுகின்றன.நவகிரகங்களின் சுழற்சியால் பாதகமோ பலவீனமோ ஏற்படும் போது பரிகாரம் செய்துகொள்ள வசதியாக அந்தந்த நட்சத்திரங்கள் மற்றும் நவகிரகங்களுக்குரிய விருட்சங்கள் காலச் சக்கரமாக ப்ரதிஷ்ட்டையாகியுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..

No comments:

Post a Comment