Pages - Menu

Friday, May 27, 2016

தன்வந்திரி பீடத்தில் அன்னதோஷம் நீங்க அன்னபூரணிக்கு அன்ன படையல் நடைபெற்றது.









வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில்  இன்று 27.05.2016 நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை ஆகியுள்ள அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு வழிபாடு செய்து வருகிற பக்தர்களுக்கு அன்ன பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் வேலூர் ரெப்கோ வங்கி கிளை மேலாளர் திரு. தாமோதரன் அவர்கள் கலந்து கொண்டு.சிறப்பித்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு அரிசியுடன் காசும்  வழங்கப்பட்டது.. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment