Pages - Menu

Saturday, May 28, 2016

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மாபெரும் சுதர்சன ஜெயந்தி விழாவும் மகாசுதர்சன ஹோமமும் ஜீலை14 நடைபெறுகிறது


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில்அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பாக வருகிற ஜீலை மாதம் 14 ம் தேதி வியாழக்கிழமை தசமி அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு கீழ்கண்ட பலன்களை பெற்று உலக மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாபெரும் சுதர்சன் ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை  ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது..
ஸ்ரீசுதர்சன ஹோம பலன்கள்,
வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். பொதுவாக, பல வகையான ஹோமங்கள், ஏதோ குறிப்பிட்ட ஒரு நற்பலனை உத்தேசித்து மட்டுமே செய்யப்படுபவை.
ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது.தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்டஐஸ்வர்யம் பெறவும், புத்தியில்தெளிவு கிடைக்கவும், பத்துக்கள்வராமல் தடுக்கவும்,பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில்உள்ள பசு அதிகம்பால்சுரக்கும், பசுவைஎந்தநோயும்அண்டாது இருக்கவும்,சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும்! எதிரிகள்தொல்லை நீங்கவும்! மன நலம் குணமாகவும்,புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும்,. விரைவில் மனோபலம் பெறவும்,தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தணியவும்,குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்,
சுதர்சன ஹோமத்தில் கீழ்கண்ட பொருட்கள் விஷேசமான முறையில் சேர்க்கப்பட உள்ள்து
 வெண்கடுகு,எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம்,அருகம்புல், சர்க்கரைபொங்கல்,தயிர்,நாயுருவி,,ஆலமரசமித்து,நெய்,பஞ்சகவியம்,கருநொச்சி,இருமுள்,நீல ஊமத்தபூ,வெள்ளை புலாச்சு, குக்கிலு,சம்மதபூ,வெண்பட்டு போன்ற பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமத்தில் பங்பேற்று சுதர்சன பெருமாளின் அருள் பெற்று நலம்பேற ப்ரார்த்திக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513 phone 04172-230033.230274

No comments:

Post a Comment