Pages - Menu

Sunday, March 20, 2016

மார்ச் 23ல் தன்வந்திரி பீடத்தில் யந்திர ப்ரதிஷ்டை

நவாக்ஷரி சோடஷாக்ஷரி யந்திரங்கள் ப்ரதிஷ்டை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 23.03.2016 புதன் கிழமை காலை 4.30 to 6.00 மணிக்கு பக்தர்கள் நலன் கருதியும் சகலவிதமான காரியங்கள் ஜெயம் பெறவும் இயற்கை வளம்பெறவும் விவசாயிகள் நலம் பெறவும் பொதுமக்கள் அனைத்தும் பெற்று நல்வாழ்க்கை வாழவும் பலதரப்பட்ட நோய்கள் அகலவும் மேற்கண்ட யந்திரங்களை வைத்து கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு ஹோமங்களும்மந்திர உச்சாடன்ங்கள் செய்து வருகிற பங்குனி உத்திரத்தில் யாக சாலைகள் அமைத்து யாகங்கள் செய்து  தன்வந்திரி பீடத்தில்உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்தினி மற்றும் ஸ்ரீ ஆரோக்கியலட்சுமி சன்னதியில் யந்திர ப்ரதிஷ்டை நடைபெறுகிறது...இதற்கான பூர்வாங்க பூஜைகள் 22.03.2016 செவ்வாயகிழமைமாலை 6.00 மணியளவில் துவங்கஉள்ளது.ப்ரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு கோபூஜையும், சுமங்கலி பூஜையும்முனீஸ்வர பூஜையும் நவகன்னி பூஜையும் நடைபெறுகிறது. புதன் மாலை சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.. இந்த தகவலை டாக்டர் கயிலைஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு’

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கியபீடம்,
அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை. 632513

No comments:

Post a Comment