Pages - Menu

Thursday, July 30, 2015

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மக்களின் ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவித்தல் 30.07.2015

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மக்களின் ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவித்தல்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இன்று 30.07.2015, வியாழக் கிழமை டாக்டர் அப்துல் கலாம் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றி  பிரார்த்தனை செய்யப்பட்டது.

மக்கள் ஜனாதிபதியாக அனைத்து மக்களின் இதயங்களில் குடி கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் யாருடைய மனதையும் துன்புறுத்தாமல் வாழ்ந்தவர்.அனைத்து மதத்தினரும் மதிக்கத்தக்கவர்,விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்தவர். மதம்,இனம்,மொழி,நிறம்,என்று வேறுபாடின்றி பழகியவர். தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர். புனித பூமியான இராமேஸ்வரத்திற்கு மேலும் புனிதம் சேர்த்தவர். மக்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.இன்று குரு பூர்ணிமா நாளில்  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மௌன அஞ்சலியும்,மோட்ச தீபமும் ஏற்றி அன்னாருடைய ஆத்மா சாந்தியடையவும் அவரை பிரிந்து வாழும் சொந்தங்கள் மன அமைதி பெறவும் பல்வேறு மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.இந்த தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார். 






No comments:

Post a Comment