Pages - Menu

Monday, June 1, 2015

21.06.2015ல் தன்வந்திரி பீடத்தில் கந்தர்வராஜ யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 21.06.2015 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 கந்தர்வராஜ யாகம் நடைபெற இருக்கிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

அந்த வகையில் வருகிற 21.06.2015 ஞாயிற்று கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு கந்தர்வராஜ யாகம்  நடைபெற உள்ளது. மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in


No comments:

Post a Comment