Pages - Menu

Monday, June 1, 2015

19.06.2015 ல் தேய்பிறை அஷ்டமி யாகம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன்கருதி 19.06.2015 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவருடன் மஹா பைரவருக்கு சிறப்பு பூஜையுடன் பைரவர் ஹோமமும் நடைபெற உள்ளது.

பைரவர் பூஜை மற்றும் ஹோமத்தின் சிறப்பு…

பைரவர் பூஜையிலும், ஹோமத்திலும் கலந்துகொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். வறுமை ஒழியும், பகைவர்களின் தொல்லைகள் நீங்கும், பயம் நீங்கும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும், தன லாபமும் ஏற்படும், வியாபார முன்னேற்றம் கிடைக்கும், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கும், மனதில் மகிழ்ச்சியை பெறலாம்கண்திருஷ்டி, பொறாமைகள், பலவிதமான தோஷங்கள் நீங்கும். மேலும் வியாதிகள் அகலும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், தொழில் மேன்மை அடையும்சரஸ்வதி அருள் கிடைத்து கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், நவகிரஹ தோஷம், ஜாதக தோஷம், அந்தர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், 7 ம் சனி, அஷ்டம சனி, அர்த்தாஸ்டம சனி, பிதுர் தோஷம் நிவர்த்தியாகி ஸ்ரீ அஷ்டபைரவர் சகித காலபைரவராக அருள்பாலிக்கின்ற நவபைரவருடன் சொர்ணபைரவர் திருவருள் பூரணமாக கிடைக்கும். மேற்கண்ட வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று வருமைகள் நீங்கி வலிமை பெற ப்ரார்த்திக்கின்றோம்.

குறிப்பு : இந்நாளில் கால பைரவருக்கு சிகப்பு அரளி கொண்டு விசேஷ ஆராதனையும், வெள்ளை பூசணிக்காயில் இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெயுடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், மிளகுசாதம், உளுந்து வடை, மற்றும் முந்திரி திராட்சை கொண்டு நிவேதனம் செய்வதும், மஞ்சள், சந்தனம் போன்ற விசேஷ திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்த பலன்தரும்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
e-Mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment