Pages - Menu

Saturday, May 9, 2015

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு மருத்துவ மேளா நடைபெற்றது…







வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 9.05.2015 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் மருத்துவ மேளா நடைபெற்றது. இந்த ஹோமம் மற்றும் மருத்துவ மேளாவில் டாக்டர் டில்லிபாட்ஷா, டாக்டர் சரத்பாபு, டாக்டர் சிவஞானம் மற்றும் டாக்டர் மீரா சுனில் ஆகியோர் பங்கேற்று மருத்துவ மேளாவை சிறப்பாக நடத்தித் தந்தனர்.


மேலும் இதில் பக்தர்கள் மற்றும் அருகில் உள்ள ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுச் சென்றனர். மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. மேலும் தொடர்ந்து நாளை (10.05.2015) நடைபெறக்கூடிய மருத்துவ மேளாவிலும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment