Pages - Menu

Wednesday, April 15, 2015

இன்று (15.4.2015) புதன்கிழமை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி முதியோர் இல்ல திறப்புவிழா இனிதே நடைபெற்றது…










வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம், ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி மையம், தியான மண்டபம், மூலிகை வனங்கள், கோ பராமரிப்பு, அன்னதானம், யாக வழிபாடு போன்ற பல்வேறு சேவைகளை பொது மக்களுக்கு செய்துவரும் தன்வந்திரி ஆரோக்ய பீடம் மேலும் ஒரு சேவையாக முதியோர்களை காக்கும் வகையில் இயற்கை சூழலில் காற்றோட்டமான அமைப்பில் இறை பக்தி கமழும் விதத்தில் சகலவிதமான வசதியுடன் 3000 சதுர அடியில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி முதியோர் இல்லம் இன்று 15.4.2015 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த விழாவானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடனும், கோ பூஜையுடனும், தருமபுரி, இசையரசு R.வெங்கடாஜலபதி அவர்களின் நாதஸ்வர இசையுடன், திருமதி. நிர்மலா முரளிதரன் குத்துவிளக்கேற்ற திறப்பு விழா துவங்கியது.

மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடா, சைவ ஷேத்திர பீடாதிபதி ஸ்ரீ சிவசாமி அவர்கள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் M.கலையரசு M.Com., MLA., ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் சென்னை மருத்துவர் R.ரங்கராஜன், MD., மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment