Pages - Menu

Wednesday, March 4, 2015

ஸ்ரீ தன்வந்திரி மகா பீடத்தில் நவ சண்டி யாகத்துடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி மஹா கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி மகா பீடத்தில் நாளை 05.03.2015 காலை 10.30 முதல் 11.00 மணிக்குள்ளாக மாசி மகத்தை முன்னிட்டு பௌர்ணமி நாளில் 9 அடி உயரமுள்ள ஸ்ரீயக்ஞ ஸ்வரூபிணி மஹா ஐஸ்வர்ய ப்ரதியங்கிரா தேவி விக்கிரஹ பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது. அதனை முன்னிட்டு திங்கட்கிழமை 02.03.2015 காலை முதல் யாக சாலை பூஜைகள் நடந்து வருகிறது. இன்று காலை மூன்றாவது கால யாகத்தில் சென்னையைச் சேர்ந்த திரு.A.V.நாத் திருமதி.இன்பவள்ளி ஹரி திருமதி.ஷீலா நாகநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதை தொடர்ந்து மாலை நான்காவது கால யாகமும் நாளை காலை 10.00 மணியளவில் மஹா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நவ சண்டி யாகமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி அருளை பெற ப்ரார்த்திக்கின்றோம். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment