Pages - Menu

Sunday, March 8, 2015

வாலாஜாபேட்டை கீழ்ப்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 08.03.2015 இன்று காலை 10.30 மணியளவில் ஆண்டு பொதுத்தேர்வை முன்னிட்டு லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது.


கலைகளில் தேர்ச்சி பெற, வேதாந்த உண்மைகளை அறிந்து கொள்ள, எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெற, பக்தர்கள் நல்வழி ஞான வடிவம் பெறவும், சந்தேகங்களில் தெளிவு பெற, தலையெழுத்தை மாற்றி அமைக்கவும், அஞ்ஞான இருள் விலக, எதிர்மறை எண்ணங்கள் விலக, துன்பங்கள் விலக, கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் பெற, எதிரிகளை வெல்ல, ஆனந்த மயமான வாழ்வைப் பெற போன்ற பல்வேறு விதமான அற்புதங்களை பெறக்கூடிய ஹோமமான ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமத்தில் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு ஹயக்ரீவருடன் அருள் பெற ப்ரார்த்திக்கின்றோம். இந்த ஹோமத்தில் ஏலக்காய், வெண்கடுகு, நாயுருவி, மற்றும் வாசனாதி திரவியங்கள் சேர்ப்பதால் ஹோமத்தின் பலன் பரிபூரணமாக கிடைக்கும். வருகிற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் தேர்வில் வெற்றி பெற்று விரும்பிய துறையில் சேரவும் இந்த யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment