வேலுர்
மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த
கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பக்தர்கள்
ஆரோக்கியத்திற்காகவும், சனி பகவானின் உக்கிரம்
தனியவும், உலக மக்களின் நலன்
வேண்டியும், பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை
காலை 10.00 மணியளவில் மாபெரும் சனிசாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. உடன்
காலச்சக்கர பூஜையும், வன்னி விருட்ச பூஜையும்
நடைபெறும். இந்த ஹோமத்தில் ஏழரை
சனி மற்றும் அஷ்டம சனியினால்
அவதிப்படுபவர்களும், சனி தசை, சனி
புக்தி நடைபெறுபவர்களும், தொழில் உத்தியோகம் போன்றவற்றில்
பாதிப்படைந்தவர்களும், படிப்பில் கவனம் செலுத்த முடியாத
மாணவர்களும், தேவையற்ற மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டவர்களும்,
திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தைப்
பேறு இல்லாதவர்களும், வழக்கு வியாஜ்யங்களில் பாதிக்கப்பட்டவர்களும்,
தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும்,
இதர தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த மஹா சனிசாந்தி
ஹோமத்தில் பங்கேற்று பயன் பெறலாம் என்று ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment