Pages - Menu

Wednesday, December 31, 2014

தன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு சனி சாந்தி ஹோமம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்களுடைய அனைத்து விதமான உடற்பிணி மற்றும் உள்ளத்துப் பிணி நீங்க பல்வேறு ஹோமங்கள் தினசரி, வாரம், வாரம் இருமுறை மற்றும் மாதம் தோறும் சிறப்பு ஹோமங்கள் பக்தர்களின் தேவைகள் பூர்த்திக்காக நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்டும் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரம் நடைபெறும் பக்தர்களுக்காகவும், பித்ரு தோஷங்கள், முதியோர் சாபங்கள், கர்மவிணை போன்றவைகளால் ஏற்படும் பாதகங்கள் குறைவதற்காக வருகிற 3.01.2015 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை சனி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு விரைவில் திருமணம், நல்ல தொழில் அமைதல், விபத்து ஏற்படாமல் தடுத்தல், ஆரோக்ய குறை நீக்குதல், பொருளாதார தடை நீங்குதல் போன்ற பல்வேறு பலன்கள் பெறலாம்.

நிறைவாக தன்வந்திரி பீடத்தில் உள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் நல்லெண்ணெய், எள்ளு, பச்சரிசி போன்றவைகளை அளித்து சனிதோஷ நிவர்த்தி பெறலாம். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெறும் என்று பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.
போன் : 04172-230033, 230274.

No comments:

Post a Comment