திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று ( 02.11.2014) சனி பகவான் துலாம்
ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குபெயர்ச்சியாகிறார்
இதனை முன்னிட்டு காலை 10.00 மணி அளவில் சனி
பெயர்ச்சி யாகம் சிறந்த வேத
விற்பன்னர்களை கொண்டு சனி பகவானுக்கு
உரிய எள் நல்லெண்ணெய் வன்னி
சமித்து பச்சரிசி எள்ளு சாதம் கருப்பு
மற்றும் நீல வஸ்திரங்களை கொண்டு
உலக மக்களின் உடல் ரீதியான மன
ரீதியான நோய்கள் நீங்கவும் சனி
பகவானால் ஏற்படும் தீமைகள் அகலவும் அஷ்டம
சனி ஏழரை சனி அர்த்தாஷ்டம
சனி போன்றவைகளினால் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும் சனி தசை சனி
புத்தியில் ஏற்படும் இன்னல்கள் குறையவும் இந்த யாகம் நடை
பெற்றது. இதனை தொடர்ந்து கால
சக்கர பூஜை நடைபெற்றது இதில் அனைத்து மதத்தினரும் பங்குபெற்று பயன்பெற்றனர் என
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment