தன்வந்திரி
பீடத்தில் 9 தலை நாகத்துடன் ஐஸ்வர்ய கலசம் கொண்டு 7 அடி உயரத்தில் மகாபலிபுரம் பிரகாஷ்
சிற்ப கலைக்கூடம் திரு.லோகநாத ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா
தேவியை விரைவில் ப்ரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இச்சிலை கேரளா, கர்நாடகா, புதுவை மற்றும்
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கரிக்கோல பவனியாக சென்று வந்து, இன்று மாலை 5.00 மணியளவில் போயஸ்கார்டனில்
உள்ள திரு. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் சிறப்பு
வழிபாடு செய்து மகிழ்ச்சியுடன் ப்ரத்யங்கிரா தேவியின் அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் செய்திருந்தார்.

No comments:
Post a Comment