Pages - Menu

Wednesday, November 26, 2014

தன்வந்திரி பீடத்தில் சுயம்வர கலா பார்வதி யாகம் 30.11.2014 ஞாயிற்று கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை

இந்த ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரக

தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் திருமணம்

உடனே நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சுயம்வரகலா பார்வதி ஹோமம்

சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின்

மூலம் அடையும் பலன்கள் ஏராளம்.

எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து

மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவியும், மனைவிக்கு ஏற்ற

கணவகும் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு

மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

மேலும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பத்து ஆண்டு காலமாக பலவிதமான

சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் பிரதி மாதம் 3வது

ஞாயிற்றுக்கிழமையில் திருமணமாகாத ஆண்களுக்கான கந்தர்வராஜ ஹோமமும்,

பிரதி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பெண்களுக்கான சுயம்வரகலாபார்வதி

ஹோமமும் நடைபெற்று வருகிறது அந்த வகையில் வருகிற 30,11,2014 ஞாயிற்று

கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை

கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற உள்ளது,மேலும் பங்கேற்க்கும்

நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும் , .

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை

ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற

இந்த ஹோமங்களில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள்

கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment