வேலூர் :ஒரு லட்சம் நெல்லிக்கனியை கொண்டு யாகம், தன்வந்திரி பீடத்தில் நடந்தது.வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக நன்மைக்காக ஒரு லட்சம் நெல்லிக்கனியை கொண்டு கனகதாரா, மகாலட்சுமி, தன் வந்திரி யாகம் வரும், நேற்று முதல், 26ம் தேதி வரை நடக்கிறது. உலக நலன், மண் வளம், மழை வளம், தொழில் வளம், குடும்ப நலன் வேண்டியும், உடல் பிணி, உள்ளத்துப் பணி நீங்கவும், கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், வியாபாரம், தொழில், வேலை செழிக்கவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது.நேற்று, நெல்லிக்கனி யாகம் துவங்கியது. ஒரு லட்சம் நெல்லிக்கனிகளை யாக குண்டத்திலிட்டு, முரளிதர ஸ்வாமிகள் யாகத்தை நடத்தினார். இன்று, மகாலட்சுமி யாகம், நாளை தன்வந்திரி ஹோமம், 26ம் தேதி கனக தாரா யாகம் நடக்கிறது.
No comments:
Post a Comment