Pages - Menu

Monday, September 15, 2014

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் கோயில் - வாஸ்து நிவர்த்தி பீடம்



தன்வந்திரி விஜயம் - செய்திகள்

வாஸ்து பகவான்

வாஸ்து பகவானுக்கு தனி பீடம் உலகில் முதன் முறையாக வாஸ்து முறைப்படி அமைத்திருப்பது தன்வந்திரி பீடத்தின் தனிச்சிறப்பாகும். இங்கு வாஸ்து நாட்களிலும் வளர்பிறை பஞ்சமியிலும் நாம் வசிக்கும் இடங்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், மற்றும் ஆலையங்கள், போன்றவற்றில் உள்ள வாஸ்து குறைகள், மற்றும் தோஷங்கள், அகல வாஸ்து சாந்தி ஹோமமும், வாஸ்து தோஷ நிவர்த்தி பூஜைகள்  நடைபெறுகிறது. இதில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்துயந்திரங்கள் மச்சயந்திரங்கள் செங்கல், மணல் பிரசாதங்கள் தேவைப்படுபவர்களுக்கு குறைந்த காணிக்கையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பெற்று செல்கின்றனர்.

வாஸ்து பகவான் அமைப்பு

தன்வந்திரி பீடத்தில் ஈசான்யபாகத்தில் 8க்கு 8அடி சதுர வடிவில் ஐந்துக்கு ஐந்து அடி வட்டத்தில் வாஸ்து பகவான் ஆகாயத்தை பார்க்கும்விதமாக படுத்தகோலத்தில் பஞ்சபூதங்களையும் கொண்டு வடிவமைக்கப்ட்டுள்ளது.  அஷ்டதிக்குகளிலும் லிங்கவடிவில் அஷ்டதிக் பாலகர்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை,632513 போன் 04172 230033, 9443330203

www.dhanvantripeedam.com www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment