Pages - Menu

Monday, August 18, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது..










வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் (17.08.2014) நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பீடத்தில் உள்ள, நவநீத கிருஷ்ணனுக்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகம் நடைபெற்றது.

கிருஷ்ணனுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் கருங்கல்லில் ஆன உஞ்சலில் நவநீத கிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து மாதம்தோறும் ஸ்ரீ கிருஷ்ண ஹோமம், நவநீத கிருஷ்ண ஹோமம், இராஜகேபாலா யாகம், சந்தான கோபால யாகம் போன்ற யாகங்கள் நடைபெற்று தம்பதிகள் கைகளினால் ஊஞ்சல் தாலாட்டு, வெண்ணெய் சாற்றுதல் போன்ற வைபவங்கள் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமியை முன்னிட்டு நவநீத கிருஷ்ணனுக்கு  சிறப்பு ஹோமமும், அபிஷேகம் நடைபெற்றது. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் சாற்றி, விசேஷ பட்சணங்கள், நெய்வேத்தியங்கள் செய்யப்பட்டது. 

இந்த தகவலை  யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் தெரிவித்தார்.


No comments:

Post a Comment