Pages - Menu

Friday, August 8, 2014

வரலட்சுமி நோன்பு முன்னிட்டு சிறப்பு கௌரி ஹோமமும், கூட்டுபிரார்த்தனையும் நடைபெற்றது






 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 08.08.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு கௌரி ஹோமமும், அபிஷகமும்,  கூட்டுபிரார்த்தனையும்  நடைபெற்றது.. 

 பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.

எனவே வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பீடத்தில் உள்ள மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரக்கு சிறப்பு கௌரி ஹோமமும், அபிஷகமும் நடைபெற்றது. ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு பெண் தெய்வங்கள் ஸ்ரீமகிசாசூர்மர்த்தினி, ஸ்ரீஆரோக்யலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீகாயத்ரிதேவி, ஸ்ரீமகாமேரு சிறப்பு அபிஷகமும் நடைபெற்றது மேலும் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு மற்றும் செளபாக்ய பொருட்கள் வழங்கப்பட்டது.  பின்னர் பக்தர்களூக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment