Pages - Menu

Thursday, August 14, 2014

தன்வந்திரி பீடத்தில் 51 சக்தி பீட யாகம் சிறப்பாக நடைபெற்றது...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று (14.08.2014) கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 51 சக்தி பீட யாகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த யாகத்தில் 51 பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளினால் மூலிகை திரவியங்களை சமர்ப்பித்தனர். பின்னர் மகா பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவு பெற்றது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலச தீர்த்தங்களை நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பீடத்தில் அமைந்திருக்கும் பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. பின்னர். மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment