Pages - Menu

Sunday, August 17, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் (17.08.2014) கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 51 சக்தி பீட மாத்ருகாஹோமங்கள் கடைசி நாள் யாகம் மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது.

 இந்த யாக குண்டமானது சக்தி (சூலம்) வடிவில் அமைத்து,
சூலத்திற்குள் 51 ஹோம குண்டங்கள் அமைத்து, முதல் 2 நாட்கள் பெண்களும், 3வது நாள் தன்வந்திரி குடும்பத்தினரும், 4வது நாள்இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானிகரும், ஸ்ரீ வித்யா உபாசகருமான, ஸ்ரீ நடன சாஸ்திரி அவர்களின் வழிகாட்டுதலின்படி மஹா மாத்ருகா ஹோமங்கள் நடைபெற்றது.

51 ஹோம குண்டங்களில் 51 சிவாச்சாரியார்கள் 51 சக்தி தேவிகளை ப்ரார்த்தனை செய்து சக்தி மந்திரத்தை ஜபித்து தங்கள் கைகளினால்மூலிகை திரவியங்களை சமர்ப்பித்தனர். பின்னர் மகாபூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவு பெற்றது. இந்த யாகத்தில்வைக்கப்பட்டிருந்த கலச தீர்த்தங்களை மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இராணிப்பேட்டை டி.எஸ்.பி திரு.சங்கர் அவர்கள், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை திரு.சரவணன், குழு உறுப்பினர்களும்,  சென்னை மருத்துவர் ஆர்.ரங்கராஜன், சென்னை சேர்ந்த திரு. முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பீடத்தில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு  ஹோமமும், அபிஷேகம்நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தகவலை  யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்
தெரிவித்தார்.











No comments:

Post a Comment