Pages - Menu

Saturday, February 1, 2014

சனிசாந்தி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…

வாலாஜாபேட்டை பிப்ரவரி 01, 2014, தன்வந்திரி பீடத்தில் மாதம் தோறும் முதல் சனிக்கிழமை அன்று நடைபெறக்கூடிய சனிசாந்தி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. தங்களது சகல தோஷங்களும் நீங்கவேண்டும் என்று இந்த ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். மேலும் திருநெல்வேலியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர் பக்தர்கள் பீடத்தில் அமைந்துள்ள 69 பரிவார தெய்வங்களையும், தன்வந்திரி பகவானையும் சுற்றி சேவித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியை பெற்று மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment