Pages - Menu

Tuesday, January 28, 2014

தன்வந்திரி பீடத்திற்கு ப்ரத்யங்கிரா பீடத்தின் பீடாதிபதி சப்தகிரி அம்மா அவர்கள் வருகை ...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ப்ரத்யங்கிரா பீடத்தின் பீடாதிபதி சப்தகிரி அம்மா அவர்கள் வருகை புரிந்தார். ஸ்வாமிகளுக்கு தன்வந்திரி குடும்பத்தினர் பூர்ண கும்ப மரியாதை வழங்கினர். பின்னர் பீடத்தின் மூலவர் தன்வந்திரி பகவானையும், இதர 69 பரிவார தெய்வங்களையும் சுற்றி சேவித்தார். சப்தகிரி ஸ்வாமிகள் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்தார்.

மேலும் கடந்த மாதம் 19.12.2013 முதல் 25.12.2013 வரை 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு ப்ரத்யங்கிரா யாகம் நடந்த இடத்தில் 27 அடி உயர ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி மகா பீடம் அமைய இருக்கிற இடத்தை பார்வையிட்டார்.



No comments:

Post a Comment