Pages - Menu

Wednesday, January 1, 2014

புத்தாண்டு மற்றும் அனுமந்த் ஜெயந்தி சிறப்பு பிரார்த்தனை…













2014 புத்தாண்டு மற்றும் அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் நலமுடன் ஆரோக்யமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தன்வந்திரி பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமும், 2014 பூசணிக்காய் கொண்டு (கூஸ்மாண்ட ஹோமமாக) த்ருஷ்டிதுர்கா ஹோமம், ஆரோக்யத்திற்கும், வாழ்வில் வளம்பெறவும் வேண்டி ஸ்ரீ குபேரலட்சுமி ஹோமம், மனநலம், உடல் நலம் வேண்டி மஹா தன்வந்திரி ஹோமம் என ஆகிய மூன்று ஹோமங்களும் நடைபெற்றது. மேலும் 9 அடி ஆஞ்சநேயருக்கு 9 விதமான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சுற்றுபுற மக்கள் பயன்பெற வேண்டி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் Dr.R.நந்தகோபால் IAS, அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் இராணிப்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.காந்தி, இராணிப்பேட்டை தொழிலதிபர் S.M.சுகுமார், டாக்டர் தொப்பக்கவுன்டர், டாக்டர் ரங்கராஜ், டாக்டர் ஜெயசங்கர், அலமேலு பாஸ்கர், உள்ளூர் பிரமுகர்கள், ஆன்மிக வாதிகள் மற்றும் சாதுக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து இந்த ஹோமத்திற்கு தேவையான பூசணிக்காய்கள் மற்றும் ஹோமத்திரவியங்களை கொண்டு வந்து கூட்டுப்ரார்த்தனையிலும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். மேலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளாக பக்தர்கள் பீடத்திற்கு வருகை தந்து தன்வந்திரி பகவானையும் இதர 68 பரிவார தெய்வங்களையும் புத்தாண்டில் நோய் நொடியின்றி சகல செல்வம் பெற வேண்டி ப்ரார்த்தனை செய்தனர்.

No comments:

Post a Comment